Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஆஸ்கார் விருது விழாவில் ஆறு விருதுகளை அள்ளிச் சென்ற டியூன் திரைப்படம்.. வைரலாகும் அப்டேட்.!

Dune movie that won six awards at the Oscars

உலகமே உற்றுநோக்கும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கியது. அதன்படி, 94வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஹாலிவுட் பவுல்வார்ட்டில் உள்ள டால்பி திரையரங்கத்தில் நடைபெறும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவானது, இந்த ஆண்டு வழக்கமான பாரம்பரிய முறைப்படி நடைபெறுகிறது.

ஆஸ்கர் விருது விழா கடந்த 4 வருடங்களாக தொகுப்பாளர்கள் இன்றி நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு வாண்டா சைக்ஸ், ஏமி ஸ்கூமர், ரெஜினா ஹால் ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர். ஆஸ்கர் விருது விழாவை மூன்று பெண்கள் தொகுத்து வழங்குவது இதுவே முதன்முறை.

ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியலுக்கு ‘பெல்பாஸ்ட்(Belfast)’, ‘கோடா (CODA)’, ‘டோண்ட் லுக் அப்(Don’t Look Up)’, ‘டிரைவ் மை கார்(Drive My Car)’, ‘டியூன்(Dune)’, ‘கிங் ரிச்சர்டு(King Richard)’, ‘லிக்கொரைஸ் பீஸா(Licorice Pizza)’, ‘நைட்மேர் அலே(Nightmare Alley)’, ‘தி பவர் ஆப் தி டாக்(The Power of the Dog)’, ‘வெஸ்ட் சைடு ஸ்டோரி(West Side Story)’ ஆகிய 10 படங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த நிலையில், வெஸ்ட் சைடு ஸ்டோரி திரைப்படத்தில் நடித்த அரியானா டிபோஸ் சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது வென்றார். டெனிஸ் வில்லெனு இயக்கிய டியூன் படத்துக்கு சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒலி ஆகிய 6 பிரிவுகளில் ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

டியூன் படத்துக்கு 2 ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த இசைக்கான ஆஸ்கர் விருதை டியூன் படத்திற்காக 5 இசையமைப்பாளர்கள் பெற்றனர். சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை டியூன் படத்திற்காக கிரேக் பிரேசர் பெற்று கொண்டார். டியூன் படத்திற்காக சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்காக பேட்ரிஸ் வெர்மெட்டெ மற்றும் சுசன்னா சிபோஸ் ஆகியோருக்கும், சிறந்த படத்தொகுப்புக்காக ஜோ வாக்கருக்கும், சிறந்த பின்னணி இசைக்காக ஹேன்ஸ் ஸிம்மருக்கும், சிறந்த ஒலிப்பதிவுக்காக மேக் ருத், மார்க் மங்கினி, தியோ கிரீன், டக் ஹெம்பில் மற்றும் ரான் பேர்லெட் ஆகியோருக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளன.

Dune movie that won six awards at the Oscars
Dune movie that won six awards at the Oscars