லைக்கா புரோடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். தற்காலிகமாக ‘தலைவர் 170’ என்று தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். மேலும் இப்படத்தின் படக்குழு விவரங்கள் படிப்படியாக அறிவிக்கப்படும் என்று லைக்கா புரோடக்ஷன்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.
அதன்படி, ‘தலைவர் 170’ படத்திற்கு அனிருத் இசை அமைக்க உள்ளதாக லைக்கா புரோடக்ஷன்ஸ் நேற்று அறிவித்து இருந்தது. இந்த நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் ஆகியோர் நடிக்க இருப்பதாக லைக்கா நிறுவனம் இன்று அறிவித்து இருக்கிறது. இது குறித்த எக்ஸ் பதிவுகள் வைரல் ஆகி வருகின்றன.
Welcoming the talented actress Ms. Dushara Vijayan ✨ on board for #Thalaivar170🕴🏼#Thalaivar170Team has gotten stronger with the addition of the wonderful @officialdushara 🎬🤗🌟@rajinikanth @tjgnan @anirudhofficial @RIAZtheboss @V4umedia_ @gkmtamilkumaran @LycaProductions… pic.twitter.com/s1dXzNpGBr
— Lyca Productions (@LycaProductions) October 2, 2023