நரைத்த முடிகளை கருமையாக்க மிக எளிதான வழிகள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம் வாங்க.
இன்றைய காலகட்டத்தில் வயதானவர்களை போலவே இளைஞர்கள் பெரும்பாலும் 100க்கு நரைத்த முடி பிரச்சனை ஏற்படுகிறது. உடலில் உள்ள மெலனின் குறைபாடு காரணமாக முடி நரைக்க தொடங்குவதாக மருத்துவ ரீதியாக சொல்லப்படுகிறது.
இந்த பிரச்சனைக்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்வது, நரைமுடிக்கு கலர் அடிப்பது போன்ற விஷயங்களை கையாளுவதை காட்டிலும் இயற்கையான முறையில் எப்படி இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பது என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
வீட்டில் இருக்கும் வெந்தயத்தை தொடர்ந்து சாப்பிட்டால் நலனில் குறைபாடு குறையும். அதிலும் வெந்தயத்தை வெள்ளத்தோடு சேர்த்து சாப்பிட்டால் இதன் பலன் இரண்டு மடங்காக கிடைக்கும்.
அதேபோல் தினமும் வெந்தயம் ஊற வைத்த தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்கலாம். அதைப்போல் வெந்தயத்தை ஊறவைத்து பேஸ்ட் செய்து அதனை தலையில் தினமும் காலையில் தலையில் தேய்த்து குளித்து வந்தாலும் இந்த நரைத்த முடி பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.
தொடர்ந்து இதனைப் பின்பற்றி வருவதால் முடி நரைப்பது முடிவுக்கு வரும். அதேசமயம் நரைத்த முடிகளை மீண்டும் கருப்பாக மாறத் தொடங்கும்.