தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை ஆறு சீசன் ஒளிபரப்பாகி முடிவடைந்துள்ள நிலையில் ஏழாவது சீசன் வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சி காரணமாக பிரபல சீரியல் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே மாலை நேரத்தில் ஒளிபரப்பாகி வந்த ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியல் இரவு 9.30 மணிக்கு மாற்றப்பட்டது.
இப்படியான நிலையில் தற்போது மீண்டும் இந்த சீரியலின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆமாம் அக்டோபர் இரண்டாம் தேதி முதல் இந்த சீரியல் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகும் என தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் இந்த சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.