உப்பு அதிகமாக சேர்த்துக் கொள்வதால் அது நம் உடலுக்கு தீங்கை விளைவிக்கும்.
சமையலில் நாம் பயன்படுத்தும் பொருள்களில் முக்கியமான ஒன்று உப்பு. உப்பு உணவிற்கு மிகவும் முக்கியம். ஏனெனில் உணவில் குறைவாக இருந்தால் உணவின் சுவையை குறைத்து விடும். உப்பு ஆரோக்கியமானதாக இருந்தாலும் அதிகமாக சாப்பிடும் போது சில பல பக்க விளைவுகளை நம் உடலுக்கு ஏற்படுத்திவிடும்.
உப்பு நம் உணவில் சேர்த்துக் கொண்டால் நீர்ச்சத்து மற்றும் ரத்தத்தின் அளவை குறைக்காமல் இருப்பது மட்டுமில்லாமல் இதயம் சீராக செயல்பட முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் அதிகமாக சேர்த்துக் கொண்டால் ரத்த ஓட்டம் அதிகரித்து உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தி விடும்.
மேலும் சிறுநீரகப் பிரச்சனைக்கும் வழிவகுத்து விடும்.
உப்பு அதிகமாகும் போது நம் உடலில் இருக்கும் கால்சியத்தை உறிஞ்சி விடும். அப்படி உறிஞ்சினாள் மூட்டு வலி எலும்புகள் வலுவிழப்பது போன்ற நோய்கள் நமக்கு வரக்கூடும். மேலும் உடல் கொழுப்பை அதிகரித்து இரைப்பை கட்டிகள் வரவும் வாய்ப்பு உள்ளது.
நம் உணவில் ஒரு நாளைக்கு 2.3 கிராம் அளவு உப்பை மட்டுமே சேர்த்துக் கொண்டால் போதுமானது.
அதிகமாக உப்பு இருக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக ஊறுகாய் வத்தல் போன்ற பொருட்களை தவிர்ப்பது சிறந்தது.
எனவே உணவில் குறைவான அளவு உப்பு சேர்த்து உடல் ஆரோக்கியத்தோடு வாழ்வதே சிறந்தது