நம் உணவில் அதிகமாக பாகற்காய் சேர்த்துக் கொண்டால் அது தீங்கையும் விளைவிக்கும்.
பாகற்காய் கசப்பாக இருந்தாலும் அதில் மருத்துவ குணங்கள் அதிகம் என்பது அனைவரும் அறிந்ததே.
குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் பாகற்காயை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வார்கள் ஏனெனில் இது சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள பெரும் அளவில் உதவும்.
இருந்தாலும் பாகற்காயை தினமும் சாப்பிடும் போது அது நம் கல்லீரலுக்கு பிரச்சனையை ஏற்படுத்தி விடுகிறது. கல்லீரல் பிரச்சனை இருப்பவர்கள் பாகற்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
மேலும் பாகற்காய் சாறு கர்ப்பிணி பெண்கள் சாப்பிடக்கூடாது ஏனெனில் இது கருச்சிதைவு ஏற்படுத்திவிடும். சர்க்கரை நோயாளிகள் பாகற்காய் சாப்பிடுவது சிறந்ததாக இருந்தாலும் குறைந்த சர்க்கரை அளவு இருப்பவர்கள் பாகற்காயை பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தினால் சர்க்கரை அளவு குறைவாகிவிடும். அப்படி குறைவானால் அதுவும் நம் உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும்.