தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒவ்வொரு சீரியல்களும் ஒவ்வொரு ரகத்தில் இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
மதிய வேளையில் ஒளிபரப்பாகி வந்த சந்திரலேகா சீரியல் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ரோஜா சீரியல் நேற்றோடு முடிந்தது. இதனையடுத்து நாளை முதல் இரவு 9 மணிக்கு ஆல்யா மானசா நடிக்க உள்ள இனியா தொடர் ஒளிபரப்பாக உள்ளது.
இப்படியான நிலையில் சன் டிவியில் மேலும் ஒரு சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆமாம் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியல் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விரைவில் இந்த சீரியலின் கிளைமாக்ஸை எதிர்பார்க்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
