தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் உள்ள வரவேற்பு பெற்று வருகின்றன. சலித்துப்போன கதையாக இருந்தாலும் மக்கள் தொடர்ந்து விஜய் டிவி சீரியல்களை பார்த்து வருகின்றனர்.
விஜய் டிவி தொடர்ந்து புதிய புதிய சீரியல்களை களமிறக்கி வரும் நிலையில் பழைய சீரியல்களை முடிவுக்கு கொண்டு வருகிறது. சமீபத்தில் பாரதி கண்ணம்மா முடிவடைந்து பாரதி கண்ணம்மா 2 ஒளிபரப்பாக தொடங்கியது.
சிறகடித்து பறக்க ஆசை, மகாநதி என இரண்டு புதிய சீரியல்களும் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளன. இப்படியான நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் 2 சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக தெரியவந்துள்ளது.
அதற்கேற்றார் போல தற்போது கதைக்களம் நகர்ந்து வருகிறது. ஒரு பக்கம் காதம்பரி தன்னுடைய முயற்சிகளில் தோல்வியை மட்டுமே சந்தித்து வர மறுபக்கம் ஸ்ருதி செய்த தவறுகளால் வீட்டை விட்டு வெளியே அனுப்பப்படுகிறாள். இதனால் இருவரும் மனமாறி நல்லவர்களாக மாறி இந்த சீரியல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் பொன்னி என்ற சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள காரணத்தினால் இந்த சீரியலை முடிவுக்கு கொண்டு வர இருப்பதாக சொல்லப்படுகிறது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.