தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சானல்களில் ஒன்றாக விளங்கி வருவது விஜய் டிவி. இந்த தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு.
இந்த நிலையில் பிரபல சீரியல் ஒன்று விரைவில் வெளிவர உள்ளது. அதற்கு பதிலாக சிப்பிக்குள் முத்து என்ற புத்தம் புது சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.
அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் செந்தூரப்பூவே சீரியல்தான் முடிவுக்கு வர இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. கொரானாவால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த சீரியல் மீண்டும் ஒளிபரப்பாக தொடங்கியது. ஆனாலும் மிகக் குறைந்த அளவிலேயே டிஆர்பி ரேட்டிங் பெற்று வருவதால் இதனை முடித்து வைக்க தொலைக்காட்சி சேனல் முடிவு செய்துள்ளது.
இது செந்தூரப்பூவே சீரியல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
