தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனலில் இருந்து வருவது சன் டிவி. இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. சன் டிவிக்கு ஈடுகொடுக்க முடியாமல் விஜய் டிவி, ஜீ தமிழ் உன்கிட்ட சேனல்கள் தவித்து வருகின்றன.
இப்படி சீரியல்களில் டாப் லிஸ்டில் இருந்து வருகிறது சன் டிவி. இருந்தாலும் சன் டிவி இன்னும் சில சீரியல்கள் பெரிய வரவேற்பை பெறாமல் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் சித்தி 2. முதலில் ராதிகா நடித்து வந்தபோது நல்ல வரவேற்பை பெற்ற இந்த சீரியல் அவருடைய வெளியேற்றத்திற்கு பிறகு சறுக்கலை சந்தித்து வருகிறது.
இதன் காரணமாக சித்தி 2 சீரியல் கிளைமாக்ஸ் வெகு விரைவில் ஒளிபரப்பாக இருப்பதாகவும் இதன் மூலம் இந்த சீரியலை முடிவுக்குக் கொண்டுவர இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் கவின் வெண்பா ஜோடியைக் விரும்பும் சித்தி-2 ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.