தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று வேலைக்காரன். முத்து படத்தின் ரீமேக் போல இந்த சீரியல் ஒளிபரப்பாகி தொடங்கியது. கதைக்களத்தில் மாற்றம் இருக்கும் என பார்த்தால் அதிலும் எந்த வித மாற்றமும் இல்லை.
முத்து படத்தின் அச்சு அசல் காப்பி என பலரும் விமர்சனம் செய்து வந்தனர். டிஆர்பியிலும் நாளுக்கு நாள் பின்னடைவை சந்தித்து கொண்டே இருந்தது.
இதன் காரணமாக இந்த சீரியலை முடிவுக்குக் கொண்டுவருவது தான் சரியான விஜய் டிவி முடிவு செய்து நாளையோடு இந்த சீரியலை முடிவுக்குக் கொண்டு வருகிறது. உறுதிபடுத்தும் வகையில் ப்ரோமோ வீடியோவும் வெளியாகியுள்ளது.
மேலும் விஜய் டிவியில் செல்லம்மா உட்பட மேலும் சில புதிய சீரியல்கள் ஒளிபரப்பாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.