எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா என்ற படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. சீனாவில் தோன்றிய கடந்த வருடம் உலகம் முழுவதும் பரவத் தொடங்கிய கொரானா வைரஸ் தொற்றால் திரையரங்குகள் மூடப்பட்டு தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் கொரோனா வைரஸ் பயத்தின் காரணமாக பலர் திரையரங்குகளுக்கு வர அச்சப்படுகின்றனர். மாஸ்டர் திரைப்படம் இந்த நிலையை மாற்றி அமைத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து தற்போது திரையரங்குகளை சிரிப்பலையில் மூழ்கடிக்க வருகிறது எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா. கெவின் இயக்கத்தில் அகில், இஷாரா நாயர், கிருஷ்ணப்ரியா, ரெஹனா, கௌசல்யா, ஷகிலா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் பல திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். துரை சுதாகரின் TN75 KK Creations நிறுவனம் இந்த படத்தினை தயாரித்துள்ளார்.
சுரேஷ் இப்படத்திற்கு எடிட்டிங் பணிகளை மேற்கொள்ள சுப்புராயன் ஸ்டண்ட் பணிகளை மேற்கொண்டுள்ளார். வர்ஷன் மற்றும் ஜெய்டன் ஆகியோர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். நாராயணன் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தினை வெளியிட உள்ளது. தற்போது இந்த திரைப்படம் வரும் மார்ச் 26 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முழுக்க முழுக்க காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படம் திரையரங்குகளுக்கு வரும் மக்களை நிச்சயம் சிரிக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#EngadaIruthingaIvvalavuNaala worldwide release from March 26th@Actor_Akhil1 @ishaaranair @MottaiRajendra @iYogiBabu @manobalam @DirectorKevin1 @varshanmd @ActorPublicStar @LahariMusic @ShiekPro pic.twitter.com/ZIWIo7Z9xC
— Tamilstar (@tamilstar) March 18, 2021