Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சிம்பு படத்திற்கு எதிர்ப்பு – முடிவை மாற்றிய ஈஸ்வரன் படக்குழு

eswaran release issue

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ஈஸ்வரன். இப்படம் வருகிற ஜன.14ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதனிடையே அதே தினத்தில், இந்தியாவுக்கு வெளியே இப்படத்தை ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது.

அவ்வாறு செய்தால் படத்தை திரையரங்குகளில் வெளியிட மாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் திட்டவட்டமாக அறிவித்தனர். இதையடுத்து படத்தை ஓடிடியில் வெளியிடும் முயற்சியை ஈஸ்வரன் படக்குழு கைவிட்டது.