தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான ஜெய் பீம் திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து சூர்யாவின் நடிப்பில் வரும் மார்ச் 10ஆம் தேதி திரையரங்குகளில் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் வெளியாகிறது.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் இந்தத் திரைப்படம் உருவாகி உள்ளது. இதை படத்தின் டைலர் இன்று காலை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரன்னிங் டைம் இரண்டரை மணி நேரம் என தெரியவந்துள்ளது. இதற்கு முன்னதாக அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் மூன்று மணி நேரம் ரன்னிங் டைம் ஆக இருந்தது பெரிய மைனஸ் ஆக பேசப்பட்டது. ஆனால் எதற்கும் துணிந்தவன் படத்தில் அப்படி ஒரு பிரச்சனை இல்லை என்பது தற்போது உறுதியாகியுள்ளது.