நடிகர் சூர்யாவின் 40-வது படம் ‘எதற்கும் துணிந்தவன்’. பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் திவ்யா துரைசாமி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சத்யராஜ், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் காரைக்குடியில் தொடங்கியது. தொடர்ந்து 51 நாட்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு நேற்று முடிவடைந்தது. மழை, வெயில் பார்க்காமல் கடினமாக உழைத்ததால் இது சாத்தியமானது என தெரிவித்துள்ள இயக்குனர் பாண்டிராஜ், சூர்யா உள்ளிட்ட படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.