தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ஜான்சி ராணி வீட்டுக்கு வந்திருக்க விசாலாட்சி கரிகாலனை போடா என்று திட்ட என் பொண்டாட்டியை அனுப்பி வைங்க, வீட்டுக்கு போய் ஃபர்ஸ்ட் நைட் கொண்டாடிக்கிறேன் என்று சொல்கிறான்.
அடுத்ததாக ஜான்சி ராணி எல்லாம் முடிந்து விட்டதுனு சொன்ன என்று கேட்க அப்படி தான் சொல்ல சொன்னா என்று ஷாக் கொடுக்கிறார்.
அதன் பிறகு ஜீவானந்தத்தை அழிக்க ஒருவரை சந்திக்க குணசேகரன் சென்னைக்கு சென்றுள்ள நிலையில் அந்த ரவுடி விளங்காத கையை பற்றி கேட்க அரிசி மூட்டை மேலே விழுந்து சுலுக்கிடுச்சு என அளந்து விடுகிறார். மேலும் சில வேலைகளை எல்லாம் நாமலே தான் பார்க்க வேண்டியதா இருக்கு அடித்து விடுகிறார்.
