தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து ப்ரோமோ வீடியோ மூலம் தெரிய வந்துள்ளது.
அதாவது ஜான்சி ராணியை கதிர் கழுத்தை பிடித்து வெளியே செல்ல வெளியே வந்த ஜான்சி ராணி இனி இந்த ஜான்சி ராணி யாருன்னு இவங்களுக்கு காட்டுறேன், இந்த வீட்டில இனிமே அலறல் சத்தம் மட்டும்தான் கேட்கணும் என கோபமாக பேசுகிறார்.
அதன் பிறகு அப்பத்தா குணசேகரனை அழைத்து உடனே இந்த கல்யாணத்தை நிறுத்து என சொல்ல அதற்கு என்ன பண்ணனும் என அப்பத்தா கேட்க என்ன செய்யணும்னு உனக்கே தெரியும் என அந்த 40 சதவீதம் ஷேர் குறித்து மறைமுகமாக பேசுகிறார்.
இதனால் இன்றைய எபிசோட்டும் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.