தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் நாயகியாக ஜனனி என்ற வேடத்தில் நடித்து வருபவர் மதுமிதா.
கன்னட நடிகையாக நான்கு வருடங்கள் நடித்து வந்த இவர் தமிழில் நடிக்க வேண்டும் என மிகுந்த ஆர்வத்தோடு இருந்த நிலையில் இவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் எதிர்நீச்சல். இந்த சீரியல் மூலம் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளார்.
இந்த எதிர்நீச்சல் சீரியலில் இவர் எப்போதும் புடவை, சுடிதார் மட்டுமே அணிந்து குடும்ப குத்து விளக்காக நடிக்கிறார். இந்த நிலையில் இவர் மாடர்ன் உடையில் போஸ் கொடுத்துள்ள போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்துள்ளன.