தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் நடித்து வரும் பெரியோர்கள் முதல் குட்டீஸ் வரை அனைவருக்கும் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.
ஒவ்வொருத்தரும் எதார்த்தமான நடிப்பை கொடுத்து சீரியலுக்கு மிகப்பெரிய பலமாக இருந்து வருகின்றனர். இந்த சீரியலில் குழந்தை நட்சத்திரங்களாக தர்ஷன், தர்ஷினி, ஐஸ்வர்யா, தாரா உள்ளிட்ட கதாபாத்திரங்கள் இடம் பெற்று வருகின்றன.
இந்த நிலையில் தற்போது தர்ஷன், தர்ஷினி மற்றும் தாரா மூவரும் சேர்ந்து சென்னை டிநகரில் உள்ள பிரபலமான கடையான வேலவன் ஸ்டோர்ஸில் ஆடி ஆஃபரில் ஷாப்பிங் செய்துள்ளனர்.
அவர்களுக்கும் அவர்களது குடும்பத்துக்கும் எதிர்நீச்சல் குடும்பத்திற்கும் சேர்த்து ஷாப்பிங் செய்துள்ளனர். விதவிதமான ஆடைகள் மிகக் குறைந்த விலையில் தரமானதாக கிடைப்பதாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இவர்களுடன் கூட சேர்ந்து ஷாப்பிங் செய்த ஆங்கரை வைத்து பங்கம் செய்துள்ளனர். அதிலும் தாரா போட்ட கவுன்ட்டர் எல்லாம் வேற லெவல். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் பலரையும் கவர்ந்து வருகிறது.