தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோட் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் இந்த அண்ணனுக்கு ஒண்ணுன்னா தான் ஓடி வந்தீங்க பாத்திங்களா அதுல நான் ஜெயிச்சுட்டேன்டா என்று குணசேகரன் கதிர் மற்றும் ஞானத்தை கட்டிப்பிடித்து கண் கலங்குகிறார்.
அதன் பிறகு குணசேகரன் அப்பத்தாவை பார்த்து படிச்சவ ஜெயிச்சிட்ட உழைச்சவன் தோத்து போய் நிற்கிறேன் என்று சொல்கிறார். பிறகு வீட்டு பெண்களை பார்த்து உங்கள விட்டு நான் விலகிட்டேன் இனிமே நீங்க நினைச்ச மாதிரி வாழ்ந்துக்கோங்க.. ஆனா ஒன்னு என்று ஏதோ ஒன்றை சொல்கிறார்.
செய்த தவறுகளுக்கு தண்டனை கிடைத்த பிறகு குணசேகரன் திருந்துவாரா இல்லையா என்று இன்றைய எபிசோடில் பொறுத்திருந்து பார்க்கலாம்.