தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஜனனிக்கு ஜீவானந்தம் பற்றிய உண்மைகள் தெரிய அந்த நிலையில் குணசேகரன் அப்பத்தாவை ரூமுக்குள் அடைத்து வைத்திருக்க இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்த புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் கதிர் குணசேகரனுக்கு போன் செய்து அந்த ஜனனி வந்து எல்லாத்தையும் கெடுத்துட்டா என்று இங்கு நடந்த விஷயத்தை சொல்கிறார்.
அடுத்ததாக கதிர் வீட்டுக்கு வர நந்தினி கண்ணீருடன் நீங்க பணமா வருவீங்கன்னு சொன்னாரு என்ன சொன்னா உங்களுக்கு வலிக்கும்னு தெரியல ஆனா எனக்கு வலிச்சது என்று கதறி துடிக்க கதிர் குணசேகரனிடம் சென்று என்ன சொன்னீங்க அவகிட்ட கேக்குறாங்க ஏன் அப்படி சொன்னீங்க என்று குணசேகரனை பார்த்து ஆக்ரோஷமாக கேள்வி கேட்கிறார்.
ஆனால் இது கதிரின் உண்மையான கோபமா அல்லது இப்படியெல்லாம் கோபப்படுவேன்னு பார்த்தியா என்று நந்தினியை நக்கல் அடிக்க செய்யும் வேலையா என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.