தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் சக்தி அப்பத்தாவுக்கு வெளியில எடுத்த மத்த பேரும் உள்ள போக வேண்டியது இருக்கும் அப்படியே தலைகீழாய் மாறிவிடும் என வர்ணிக்கிறார்.
அதைத்தொடர்ந்து ஆதிரை சாருபாலா மற்றும் போலீஸ் உடன் வீட்டிற்கு வர போலிசை வெளியே நிற்க வைத்துவிட்டு இருவரும் உள்ளே நுழைகின்றனர். அதிரையை பார்த்த விசாலாட்சி அதிர்ச்சி அடைகிறார்.
அடுத்து நீ என்னை ஒருமுறை கஷ்டப்படுத்தி வீட்ட விட்டு வெளியே அனுப்பதுனால நான் ஆயிரம் முறை உன்னை கஷ்டப்படுத்தி இருக்கேன் என்று சொல்லி ஜனனி வருத்தப்பட சக்தி தோல் கொடுத்து ஆறுதல் கூறுகிறார்.