தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடு நடக்கப்போவது என்ன என்பது குறித்து ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
அந்த வீடியோவில் கதிர் நிச்சயத்திற்கு கிளம்பாமல் ரூமில் உட்கார்ந்து இருக்க குணசேகரன் நீ வராமல் நான் கிளம்ப மாட்டேன் என காத்துக் கொண்டிருக்கிறார்.
மறுபக்கம் அப்பத்தா விசாலாட்சி நந்தினி ஜனனி என எல்லோரும் காரில் சென்று கொண்டிருக்கும் போது அப்பத்தா குணசேகரன் பற்றி பேச விசாலாட்சி அவர்கள் விட்டுக் கொடுத்து தானே போய்கிட்டு இருக்கான் என சொல்ல நல்லா விட்டுக் கொடுத்தார் என நந்தினி பதிலடி கொடுக்கிறார்.
இதனால் இன்றைய எபிசோட் வழக்கம் போல பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.