தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இப்படியான வீடியோவில் தோற்று போன குணசேகரன் காவி உடையில் கலங்கின படி வீட்டுக்கு வந்து மதுரை மீனாட்சியை கும்பிடுகிறார்.
எல்லோரும் வீட்டை விட்டு கிளம்ப தயாராக இருக்க அவர்களை பார்த்து எல்லோரும் கிளம்ப தயாரா இருக்கீங்களோ எனறு கேட்கிறார். கதிர் ஆமா ஆனால் யாரும் உங்க கிட்ட அனுமதி வாங்கிட்டு கிளம்ப காத்திருக்கவில்லை என சொல்கிறார்.
பிறகு நந்தினியின் அப்பா வீட்டுக்கு வர ரேணுகா வீட்டை விட்டு போறதா சொல்ல நந்தினி நாங்களும் அந்த முடிவில் தான் இருக்கோம் என சொல்கிறார். ஞானம் அவரை பெத்து வளர்த்த மாதிரி தானே எங்களையும் வளர்த்தாங்க, எங்களுக்கும் சம உரிமை இருக்கு என சொல்ல ஜனனி அதை உங்க அம்மாவை சொல்ல சொல்லுங்க பார்க்கலாம் என கேள்வி கேட்கிறார்.
உடனே விசாலாட்சி திருதிருவென முழிக்கிறார்.