தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
இது குறித்து வெளியாகி உள்ள ப்ரோமோ வீடியோவில் குணசேகரன் நீங்க என்ன செய்யணும்னு நினைக்கிறீர்களோ செய்யுங்க, ஆனால் என் பேர் வர கூடாது என கண்டிசன் போடுகிறார்.
அடுத்ததாக ஞானம் ஒரு வேலை விசயமாக வெளியே வந்திருக்க கரிகாலன் உண்மையாகவே அதிர்ஷ்டக்காரன் பா,ஒரே மாதத்தில் பணக்காரனாகிட்டான் என பேசுகின்றனர்.
கடைசியில் ஞானம் சந்திக்க வந்த ஆளே கரிகால் தான் என அறிந்து ஷாக் ஆகிறார். அதே போல் பெண்கள் 4 பேரும் ஒருவரை சந்தித்து பேசுகின்றனர். அப்போது ஜனனி நாளைக்கு ஒருவரோடு உங்களை வந்து சந்திக்கிறோம் என்று சொல்ல அந்த பெண் யாரு குணசேகரன் சார் தானே? அவர் கையெழுத்து போட்டா எல்லாமே முடிந்திடுமே என ஷாக் கொடுக்கிறார்.
இதை கேட்டு பெண்கள் எல்லோரும் எழுந்து வெளியே வருகின்றனர்.