தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். ஒவ்வொரு நாளும் காட்சிகள் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.
அந்த வகையில் இன்றைய எபிசோட்டில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. கதிர் கையெழுத்து போடாமல் குடிபோதையில் ரூமில் மட்டையாக அரசு கதிர் எங்கே என ஆவேச பட குணசேகரன் வருவாயா நீ எதுக்கு இப்ப எகிறுற என வம்பு இழுக்கிறார்.
அதற்கு அடுத்ததாக ஜனனி எப்படி மேடம் இதெல்லாம் பார்த்துக்கிட்டு அமைதியா இருக்கீங்க என சாருபாலாவை பார்த்து கேள்வி கேட்கிறார்.
இது எல்லாம் தொடர்ந்து அப்பத்தா குணசேகரனிடம் இந்த நிச்சயம் நடக்கணுமா? வேணாமா என கேட்க அதுக்கு தான் இவ்வளவு பண்ணிட்டு என சொல்கிறார். இன்னொரு பக்கம் நந்தினி, ரேணுகா ஆகியோர் கதிரை எழுப்ப முயற்சி செய்கின்றனர்.