தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
அந்த வீடியோவில் குணசேகரன் எஸ் கே ஆர் ஆகியோர் பங்கேற்கும் வீட்டில் கதிர் கண்டவெல்லாம் பேசுவேன் அமைதியா இருக்க சொல்றீங்களா என கோவப்பட்டு பேச எஸ் கே ஆர் அப்பத்தாவை கொன்னது ஜீவானந்தம் இல்ல என்று சொல்ல குணசேகரன், கதிர் அதிர்ச்சி அடைகின்றனர்.
அதைத் தொடர்ந்து வேலையில் சேர வந்த ஈஸ்வரிக்கு அங்கிருந்த டீச்சர் வருவர் உங்களுக்கு இந்த வேலை கிடைக்கணும்னு ஜீவானந்தம் ரொம்ப முயற்சி பண்ணினாரு என கூறுகிறார்.
அதன் தொடர்ச்சியாக சக்தி மற்றும் ஜனனி இருவரும் வக்கீலை சந்தித்து ஜீவானந்தத்தை வெளியே கொண்டு வந்துவிடணும் என்று பேச அதற்கு அவசியம் இல்லாமல் போயிடுச்சு என கூறி அதிர்ச்சி கொடுக்கிறார்.