தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
அதாவது காதுகுத்து ஃபங்ஷன் நடந்து முடிந்த பிறகு நந்தினி ஈஸ்வரி, ரேணுகா ஜனனி ஆகியோரிடம் எனக்கு நீங்க போதும் வேற யாரும் வேண்டாம் என்று கண்ணீர் விட்டு அழுகிறார். நான் நல்லா இருக்கும் போது என் வீட்டு பக்கம் எவனாவது வந்தா காலை வெட்டிடுவேன் என்று அதிர்ச்சி கொடுக்கிறார்.
அதன் பிறகு குணசேகரன் அவமானப்பட்டு அங்கிருந்து வெளியேற ஜான்சிராணி அன்னதானத்தை தொடங்கி வைத்து விட்டு போ என்று சொல்ல சும்மா இருந்தவனை கூப்பிட்டு அவமானப்படுத்திட்டீங்க என்று ஆவேசப்படுகிறார்.
பிறகு கதிர் என்ன மன்னிச்சிடுங்க மாமா என்று நந்தினி என் அப்பாவின் காரில் எனக்கு புள்ள இல்ல மாப்ள நீங்க தான் புள்ள மாதிரி பையன் பேசினா மன்னிக்க மாட்டேனா என்று சொல்லி கட்டி அணைத்துக் கொள்கிறார்.
