தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் வீட்டுக்கு வந்த ஜான்சி ராணி அத ஆதரைக்கு தடபுடலா கல்யாணம் ஏற்பாடு நடக்குது அருண் பையன் வெளிநாட்டிலிருந்து வந்துட்டானா என்று குணசேகரனிடம் சொல்கிறார் ஜான்சி ராணி.
அடுத்ததாக தர்ஷினி என்னை கடத்துனது எங்க அப்பா தான் அது எனக்கு 100% தெரியும் என்று சொல்ல அதைக் கேட்டு எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
இதைத்தொடர்ந்து தாரா ஜான்சி ராணியிடம் பணத்தை வாங்க வந்தோமா வாங்கணுமா போனோமானு இருக்கணும்.. அத விட்டுட்டு அண்ணா அண்ணானு எல்லாம் ஊளை விட்டு விட்டு எடுக்க கூடாது என்று சொல்ல ஜான்சி ராணி என்கிட்டயே நக்கல் பண்றியா என்று அடிக்க கை ஓங்க தர்ஷினி யாரை கை ஓங்குற என்று கழுத்தை பிடித்து நெறிக்கிறார்.
