தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்த புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
கரிகாலனின் அப்பா குணசேகரன் வீட்டுக்கு வர சீக்கிரம் கல்யாணத்தை வைத்து விடலாம் என பேசுகின்றனர். ஜனனி அதை எல்லாம் நீங்க முடிவு பண்ண கூடாது என சொல்ல கதிர் எங்க தங்கச்சி வாழ்க்கையில என்ன நடக்கணும்னு நாங்க தான் முடிவு பண்ணுவோம் என சொல்ல விசாலாட்சி அதனாலதான் அவ ஹாஸ்பிடல்ல கிடக்கும்போது அமைதியாக இருந்தீர்களா என கேட்டு பதிலடி கொடுக்கிறார்.
அதன் பிறகு ஜனனிக்கு போன் கால் வர வந்துட்டீங்களா என வெளியே போக யாரை வர வைக்குறா என குணசேகரன், கதிர் உள்ளிட்டோர் யோசிக்கின்றனர். இதனால் இன்றைய எதிர்நீச்சல் எபிசோட் பரபரப்பாக விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.