தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் குணசேகரன் ஆடிட்டர் மற்றும் லாயரை சந்தித்து பேசும் போது அப்பத்தாவை போட்டு தள்ளிடலாம் என்று முடிவெடுத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.
அதாவது, கதிர் அந்த கிழவியை நானே போட்டு தள்ளிடட்டுமா என்று கதிர் கேட்க குணசேகரன் என்னமோ கல்யாணம் முடிக்கிற மாதிரி சொல்ற, மொத்தமா முடிக்கணும் பா.. சாதாரண வேலை கிடையாது என சொல்கிறார்.
அதனை தொடர்ந்து எல்லோரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் நிலையில் தர்ஷினி அப்பத்தாவிடம் நீங்க உங்க 40% ஷேரை இவங்களுக்காக தான் வச்சிருக்கீங்கனு எனக்கு தெரியும் அப்பத்தா என்று சொல்ல உடனே அவர் நான் இவங்களுக்காக கொடுக்க போறேனு உனக்கு யார் சொன்னது என்று ஷாக் கொடுக்கிறார்.