தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இது ப்ரோமோ வீடியோவில் போலீஸ் குணசேகரனை ஸ்டேஷனுக்கு அழைத்த நிலையில் ஜனனியிடம் நான் திரும்பி வருவேன் அதுக்குள்ள நீங்க ரெண்டு பேரும் இதை விட்டு ஓடி போயிடனும் என வார்னிங் கொடுத்துவிட்டு செல்கிறார்.
குணசேகரன் ஸ்டேஷனுக்கு வர அங்கு சாருபாலா இருக்க இந்த அம்மா என்ன இங்கே இருக்கு என்று கேள்வி கேட்கிறார். இதே போலீஸ் ஸ்டேஷன் பொது இடம் யார் வேணா வரலாம் என பதிலடி கொடுக்கிறார் சாருபாலா.
அடுத்ததாக வீட்டில் ஜான்சிராணி அதிரையை பிடித்து அடித்துக் கொண்டிருக்க ஈஸ்வரி ஓடிவந்து எங்க வீட்டு பொண்ணு மேல கை வைக்கிற என பளார் என்று அறைந்து எல்லோரும் ஒன்றாக சேர்ந்து ஜான்சி ராணியின் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகின்றனர்.