தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
அந்த வீடியோவில் அடுத்து என்ன வாசுவை நிறுத்துவீங்க அதான் உங்க பிளான் என்று கரிகாலன் சொல்ல இதுவரைக்கும் எனக்கு அந்த ஐடியா கிடையாது ஆனா இப்ப நீ கொடுத்துட்ட என்று ஜனனி அதிர்ச்சி கொடுக்கிறார்.
அதைத்தொடர்ந்து ஆதிரை கண்ணீருடன் நான் போறேன் நீ என்று சொல்லிக் கொண்டிருக்க எங்கடி போற என்று ஜான்சி ராணி கேட்க ஆதிரை பளார் என அறைகிறார். அதைத் தொடர்ந்து குணசேகரன் டேய் அரசு என எஸ் கே ஆர் வீட்டுக்குள் நுழைகிறார்.
