தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் நேற்று கதிர் எதிர்த்து பேச குணசேகரன் ரூமுக்கு வந்து விட்ட நிலையில் இன்று எல்லோரும் குணசேகரனை சமாதானம் செய்ய ரூமுக்கு வருகின்றனர்.
அப்போது ஜான்சி ராணி நீ உன் தம்பிகளுக்காக உழைத்து மாடா உழைச்சு ஓடி தேயுற அண்ணே, ஆனால் அவங்களுக்கு தான் அதெல்லாம் புரிய மாட்டேங்குது என்று ஜான்சி ராணி கொளுத்தி போடுகிறார்.
அடுத்ததாக தாய் மாமனிடம் குணசேகரன் இந்த தேர்தலில் யார் ஜெயிப்பாங்க என்று கேட்க அவர் நல்லது ஜெயிக்கும், நல்லவங்க ஜெயிப்பாங்க என அதிர்ச்சி கொடுக்கிறார்.
கரிகாலன் எனக்கும் தர்ஷினிக்கும் கல்யாணம் நடக்குமா? என்று கேட்க ஈஸ்வரி கரிகாலா இதை பத்தி பேசாதேனு சொல்லியிருக்கேன் என்று கோபப்படுகிறார்.
