தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியல் ஆதிரை மற்றும் அருண் நிச்சயத்துக்காக துணி எடுக்க வந்திருக்கும் நிலையில் குணசேகரன் ஏற்கனவே ஜான்சி ராணி மற்றும் கரிகாலனை அந்த இடத்திற்கு வரவைத்திருந்தார்.
இந்த நிலையில் இன்றைய எபிசோட் குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. துணி எடுத்து முடித்த பிறகு ஆதிரை சென்டர் போகணுமாம் நாமலே ட்ராப் பண்ணிடலாம் என அருண் சொல்ல அரசுவும் சரியென சொல்கிறார்.
அடுத்து குணசேகரன் ஜான்சிராணி மற்றும் கரிகாலனை கடைக்குள் அழைத்துச் சென்று துணி எடுத்துக் கொண்டிருக்க அங்கு நந்தினி மகள் வந்து விட குணசேகரன் சிக்கிக் கொள்கிறார். இதனால் இன்றைய எபிசோட் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.