Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

முடிவுக்கு வரப்போகும் எதிர்நீச்சல் சீரியல், வைரலாகும் லேட்டஸ்ட் பதிவு

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். ஆரம்பத்தில் மக்களின் மனதை கவர்ந்த இந்த சீரியல் தொடர்ந்து நம்பர் ஒன் இடத்தை பெற்று வந்தது.

ஆதி குணசேகரனாக மக்களின் மனதில் மிகப்பெரிய இடத்தை பிடித்தார் மாரிமுத்து. இவரது எதிர்பாராத மரணம் மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரது மறை‌வுக்கு பிறகு இந்த சீரியலும் கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் வெறுப்புக்கு ஆளாக தொடங்கியது.

தற்போது மக்கள் அனைவரும் இந்த சீரியல் எப்போ முடியும் என்ற எண்ணத்திற்கு வந்து விட்டனர். இப்படியான நிலையில் தான் வரும் ஜூன் மாதத்தில் இந்த சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவலால் எதிர் நீச்சல் சீரியல் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.