தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். மாரிமுத்து ஆதி குணசேகரனாக நடிக்க பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்து வந்த இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து நம்பர் ஒன் சீரியலாக இடம் பிடித்து வந்த எதிர்நீச்சல் அவரது மறைவுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சறுக்கத்தை காணத் தொடங்கியது. வலுவில்லாத திரை கதையால் ரசிகர்களிடம் வெறுப்பை பெற தொடங்கியது.
இதனால் இந்த ஜூன் மாதத்துடன் இந்த சீரியல் முடிவுக்கு வரப் போவதாக தகவல் வெளியானது. இப்படியான நிலையில் தற்போது எதிர்நீச்சல் குடும்பம் மொத்தமா நன்றாக தெரிந்து எடுத்துக் கொண்ட சூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனால் எதிர்நீச்சல் கிளைமேக்ஸ் ஷூட்டிங் முடிந்து விட்டதோ என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
View this post on Instagram