தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். ஒவ்வொரு நாளும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் ஆதி குணசேகரனாக மாரிமுத்து நடித்து வந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இதை தொடர்ந்து அவரது கதாபாத்திரத்தில் வேல் ராமமூர்த்தி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
அவரது காட்சிகள் இன்று முதல் ஒளிபரப்பாக உள்ள நிலையில் வரும் திங்கள் முதல் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த நேர மாற்றம் தற்போது நடந்திருப்பது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.
