Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மாரிமுத்து இல்லாமல் எதிர்நீச்சல் சீரியல் பெற்ற TRP ரேட்டிங்- முதலிடத்தை தக்க வைத்ததா?

ethir neechal serial TRP rating

இன்றும் பல இடங்களில் ஆணாதிக்கம் செலுத்தும் நபர்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் பெண்கள் உள்ளார்கள்.

அப்படி அடிமைப்படுத்தும் ஒரு குடும்பத்தில் சிக்கிக்கொண்ட பெண்கள் அவர்களை எதிர்த்து எப்படி சாதிக்கிறார்கள் என்பதை காட்டும் விதமாக ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் தொடர்.

இந்த தொடரில் முக்கிய வில்லனாக மாரிமுத்து என்பவர் நடித்து வந்தார், ஆனார் அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவர் இறந்தது இப்போதும் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

இந்த நிலையில் மாரிமுத்து இல்லாமல் இந்த தொடர் எப்படி ஓடும் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் இயக்குனர் அதிரடியாக கதையை மாற்றி இப்போது விறுவிறுப்பு குறையாமல் கதையை நகர்த்தி வருகிறார்.

மாரிமுத்து இல்லாமலும் எதிர்நீச்சல் சீரியல் முதல் இடத்தை பிடித்திருக்கிறது, 10.79 ரேட்டிங்கை பெற்றுள்ளதாம்.