தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஆதிரையின் கல்யாணம் குறித்த காட்சிகள் தொடங்கி எப்படா முடியும் என ரசிகர்களை எதிர்பார்க்க வைத்து வருகிறது.
விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த இந்த சீரியலில் ஆதிரையின் கல்யாணம் என்ற பேச்சு வந்ததிலிருந்து எதிர்பார்ப்பு குறைந்து கொண்டே வருகிறது.
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் நடக்கப்போற ஆதிரை கரிகாலன் கல்யாணத்த தடுத்து நிறுத்த மாட்டோம் என குடும்பப் பெண்களிடம் குணசேகரன் சத்தியம் கேட்க ரேணுகா நாங்க எதுக்கு சத்தியம் பண்ணனும்னு கேக்குறேன் என பதிலடி கொடுக்கிறார்.
அதன் பிறகு கரிகாலன் தன்னுடைய நண்பன் எடுத்த போட்டோவை பார்த்துக் கொண்டிருக்க அதன் பின்னாடி அருண் இருப்பதை பார்த்து ஷாக்காக அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.