தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு படத்தை தொடர்ந்து அடுத்ததாக லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள விடாமுயற்சி படத்தில் நடிக்க உள்ளார்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை முடித்த கையோடு நடிகர் அஜித் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைய போவதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அது மட்டுமல்லாமல் இதற்கான பேச்சுவார்த்தைகள் கூட நடந்து முடிந்து விட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தை அட்லீ அல்லது நெல்சன் திலிப் குமார் என ஒருவர் இயக்கவே அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவந்தது.
ஏற்கனவே நெல்சன் திலீப்குமார் ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சந்திக்க நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.