பிசாசு படத்தின் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் தற்போது இயக்கியிருக்கும் படம் தான் “பிசாசு 2”. இதில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ளார். அவருடன் இணைந்து விஜய் சேதுபதி, பூர்ணா, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து ரீஎன்ட்ரி கொடுத்திருக்கிறார்.
விரைவில் திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் மிரட்டலான போஸ்டர்கள் சில மாதங்களுக்கு முன்பே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இப்படத்தில் ஆண்ட்ரியாவின் கதாபாத்திரத்தின் புகைப்படம் ஒன்று எக்ஸ்க்லூஸ்வாக வெளியாகி வைரலாகி வருகிறது.
#Pisasu2 New Still ♥️#AndreaJeremiah | #Mysskin pic.twitter.com/M4UDbjUP3t
— Saloon Kada Shanmugam (@saloon_kada) January 13, 2023