தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
3d தொழில்நுட்பத்தில் கிட்டத்தட்ட 10 மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஒன்றாக இருக்கிறது. படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சூர்யாவின் பிறந்தநாள் ஜூலை 23ஆம் தேதி இந்த படம் குறித்த அப்டேட் வெளியாகும் என தகவல் வெளிவந்துள்ளது.
அதிலும் குறிப்பாக படத்தின் கிளிம்ஸ் வீடியோ வழியாக நிறைய வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் சூர்யா ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் ட்ரீட் இருக்கு என நம்பலாம்.
