தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான வலிமை என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளார்.
வலிமை திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியானது. ஜெயலலிதாவின் பிறந்த நாளான அன்று வலிமை திரைப்படம் வெளியானதால் அஜித் அரசியலுக்கு வர இருக்கிறார் என அதிமுகவை சேர்ந்த பிரபலம் ஒருவர் கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இப்படியான நிலையில் அஜித்தின் மேனேஜர் அஜித் அவர்களுக்கு அரசியலுக்கு வரும் எண்ணமில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
அஜித் அரசியலுக்கு வர தயாராகிறார் – ஜெயலலிதாவின் உதவியாளர்!#ZeeTamilNews | #Ajith | #Valimai | #jayalalitha https://t.co/RV6oMtd3EU
— Zee Tamil News (@ZeeTamilNews) February 28, 2022