Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஏழு கடல் ஏழு மலை படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்ட படக்குழு

இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. இந்த படத்தில் கதாநாயகனாக மலையாள நடிகர் நிவின் பாலி நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார். வி ஹவ்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதில் நிவின் பாலியின் தோற்றம் ரசிகர்களை கவர்ந்து பெரிய அளவில் பேசப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ இன்று மாலை 5.01-க்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. வித்தியாசமாக உருவாகியுள்ள இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.