மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பகத் பாசில் தன் தந்தை இயக்கிய ‘கையெத்தும் தூரத்து’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் காலடியெடுத்து வைத்தார். பின்னர், பிரைட், பெங்களூர் டேஸ், டிரான்ஸ் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
இவர் தமிழில் ‘வேலைக்காரன்’, ‘சூப்பர் டீலக்ஸ், விக்ரம் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தார். சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படத்தில் இவர் நடித்திருந்த ரத்தினவேல் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.
இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு நடிகை நஸ்ரியாவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், நடிகர் பகத் பாசில் அவர்களது திருமண நாளையொட்டி கேரளாவில் முதல் சொகுசு காரான ‘land rover defender 90’ என்ற காரை வாங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.