Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தளபதி 67 படத்தில் இணையும் பகத் பாஸில்

fahadh-faasil-confirm-that-he-may-part-of-thalapathy 67

தென்னிந்திய திரை உலகில் ரசிகர்களால் அன்போடு தளபதி என்று அழைக்கப்பட்டு வருபவர் இளைய தளபதி விஜய். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான வாரிசு திரைப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து விஜய் அவர்கள் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் “தளபதி 67” திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் உருவாக இருக்கும் இப்படம் குறித்த அதிகாரிவபூர்வமான அறிவிப்பு இதுவரை வெளிவராமல் இருந்து வரும் நிலையில் இப்படத்தில் நடிக்க இருக்கும் பிரபலங்கள் குறித்த அப்டேட்கள் தற்போது வரை இணையத்தில் அவ்வப்போது வெளியாகிய ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்து வருகிறது.

அந்த வகையில் அண்மையில் இப்படத்தில் நடிகர் மன்சூர் அலிகான் நடிக்க இருப்பதாக அவரே தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து இருந்தார். அந்த வகையில் தற்போது மலையாளத் திரைப்படத்தின் பிரஸ் மீட்டில் கலந்து கொண்டிருந்த நடிகர் ஃபஹத் ஃபாசிலிடம் T67 திரைப்படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா என்ன பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது அவர், “இது இயக்குனர் லோகேஷ் யூனிவர்சில் இருந்து வருவதால், இதில் நடிக்க வாய்ப்புள்ளது”. என்று உறுதிப்படுத்தி கூறியிருக்கிறார். இந்த தகவலால் மகிழ்ச்சி அடைந்த விஜய் ரசிகர்கள் இதன் வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.