Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சமந்தா படத்தில் அறிமுகமாகும் பிரபல நடிகரின் மகள்

famous actor daughter debut Samantha film

முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தெலுங்கில் ‘சகுந்தலம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ‘ருத்ரமாதேவி’ படத்தை இயக்கிய பிரபல இயக்குநர் குணசேகர், மகாபாரத கதையை அடிப்படையாகக் கொண்டு ‘சகுந்தலம்’ படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில், தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுனின் மகள் அல்லு அர்ஹா குழந்தை நட்சத்திரமாக, இப்படத்தில் அறிமுகமாகிறார். முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் அல்லு அர்ஹா 10 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த அறிவிப்பை அல்லு அர்ஜுன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.