கொரோனா ஊரடங்கு, பொது முடக்கம் என இன்னும் முழுமையாக தளர்வுகள் எட்டப்படவில்லை. இதனால் மக்களில் இயல்பு நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தொழில்கள் பெரும் பொருளாதார பின்னடைவை சந்தித்துள்ளன.
சமூக விலகலை கடைபிடிக்கும் பொருட்டு மிக எளிமையாக திருமணம் போன்ற வீட்டு சுபகாரியங்களை நடத்த வேண்டிய கட்டாயமுள்ளது. ஆடம்பரமாக நடக்கும் சினிமா பிரபலங்களின் வீட்டு விஷேடங்களும் இதில் விதிவிலக்கல்ல.
கடந்த சில நாட்களாக ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தெலுங்கு நடிகர் நிதின் திருமணம். கொரோனாவால் தள்ளிப்போய்க்கொண்டிருந்த இவர்களின் நிச்சயத்தார்த்தம் தற்போது நடைபெற்றுள்ளது.
மிக நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் மணமக்கள் மாலை மாற்றி, மோதிரம் அணிவித்து தங்கள் அன்பை சிரிப்புடன் பரிமாற வந்திருந்தவர்கள் வாழ்த்தி ஆசியளித்தனர்.
இது குறித்த புகைப்படத்தை நடிகர் நிதின் வெளியிட்டுள்ளார்.
Aaaand ENGAGED!! ❤️❤️❤️ pic.twitter.com/MqqbRo2HsS
— nithiin (@actor_nithiin) July 22, 2020