கன்னடத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் யாஷ். நடிப்பில் வெளியான கேஜிஎப் படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்போடு வெளியாகி வேற லெவல் வசூல் வேட்டை ஆடி வருகிறது.
இந்த படத்தை தொடர்ந்து கேஜிஎப் படத்தின் மூன்றாம் பாகம் தொடங்க உள்ளது. படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கி உள்ள நிலையில் தற்போது படம் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது இப்படத்தில் நடிகர் பிரபாஸ் சில காட்சிகளில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளன.
தற்போது பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் சலார் என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
